பாலை நிலக் கானவர்களின் (வேட்டுவர்களின்) வேட்டை
பாடல் வரிகள்:
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்
வான் மடி பொழுதில் நீர் நசைஇக் குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி
புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்
அரை நாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கி
தொகுவாய் வேலித் தொடர் வலை மாட்டி
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையம்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்குஅற வளைஇ
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ்சுரம் இறந்த அம்பர்............................ (106-117)
பாடல் வரிகள்:
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்
வான் மடி பொழுதில் நீர் நசைஇக் குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி
புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்
அரை நாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கி
தொகுவாய் வேலித் தொடர் வலை மாட்டி
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையம்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்குஅற வளைஇ
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ்சுரம் இறந்த அம்பர்............................ (106-117)
விளக்கம்:
இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறியும் செய்தி:
[.....மானின் அடிச்சுவடு பொருந்தியுள்ள மயக்கம் ஏற்படுத்தக்கூடிய பாதையின்
பக்கத்தில்,மழை பெய்யாது தவிர்த்த காலத்தில்,நீரை விரும்பித் தோண்டிய
பள்ளங்களை சூழ்ந்த,மூடுகுழிகளின் உள்ளே மறைந்து ஒதுங்கி,அகத்திப் பூவைப்
போன்ற வளைந்த கொம்பையுடைய பன்றி நீர் உண்ண வரும் வரவை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்ற நடு யாமத்து வேட்டை ஆடாது ஒழிந்தால், பின் மறுநாள்
பகற்பொழுதில் திறந்த வாயையுடைய வேட்டை நாயுடன்,பசுமையான புதர்களை அடித்து
அடர்ந்த இடத்தையுடைய வேலியிடத்தில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட வலைகளைக்
கட்டி,முள்ளுடன் கூடிய தண்டையுடைய தாமரை மலரின் மெல்லிய புற இதழ்களைப்
போன்ற நீண்ட காதுகளையுடைய குறுமுயல்களை ஓடிவிடாதபடி வளைத்துப்பிடித்து
கொடிய பார்வைை கொண்ட (காட்டில் வாழும்) வேட்டுவர்கள்,அக்காட்டில் கூடி
கூட்டுணவு உண்ணும் அரிய பாலை நிலத்திற்கு அப்பால் கடந்து...]
இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறியும் செய்தி:
கொடிய பாலைநிலத்தில் வாழும் கானவர்களின்( வேட்டுவர்களின்) தொழில்
வேட்டையாடுதல்.அந்த வேட்டை மூலம் கிடைக்கும் வேட்டைப் பொருள்களை காட்டின்
ஓரிடத்தில் ஒன்றாக கூடி கூட்டுணவு கொண்டனர்.அதாவது,இவர்களுக்கென்று தனிக்
குடும்ப அமைப்பு இல்லை.அனைவரும் கூடி கூட்டு வாழ்வு வாழ்ந்தனர் என்ற செய்தி
பெறப்படுகிறது.
No comments:
Post a Comment