ஆற்றுப்படுத்துவோன் தன் செல்வ நிலையை எடுத்துரைத்தல்
பெருவறம் கூர்ந்த கானம் கல்லெனக்
கருவி வானம் துளி சொரிந்தாங்கு
பழம் பசி கூர்ந்த எம் இரும்பேர் ஒக்கலொடு
வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி
வால் உளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு
யாம் அவணின்றும் வருதும்........ (23-28)
பெருவறம் கூர்ந்த கானம் கல்லெனக்
கருவி வானம் துளி சொரிந்தாங்கு
பழம் பசி கூர்ந்த எம் இரும்பேர் ஒக்கலொடு
வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி
வால் உளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு
யாம் அவணின்றும் வருதும்........ (23-28)
விளக்கம்:
இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
[....பஞ்சத்தால் பெரும்வறட்சியுற்ற காட்டில்,இடி மின்னலுடன் வானம் மழையைப்
பொழிந்தது போன்று,நெடுநாளைய பசியால் வருந்திய எனது மிகப் பெரும்
சுற்றத்தாரோடு மற்றவருக்குக் கொடுக்க குறைவில்லாத பெரும்செல்வத்தைப்
பெற்று, வெள்ளைப் பிடரியுள்ள குதிரை அதோடு சேர்த்து வலிய யானையையும்
பெற்றுக் கொண்டு மன்னன் இளந்திரையனின் இடத்திலிருந்து யாம் வருகிறோம்!.....]
இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
வருமையால் வருந்திய ஒரு பாணன் தொண்டைமான் இளந்திரையனைக் கண்டு பாடி பல
பரிசுகள் பெற்று திரும்புகின்ற வழியில் சந்தித்த மற்றொரு பாணனிடம் "நீயும்
அந்த மன்னனிடம் சென்றால் இது போன்ற பல பரிசுகளைப் பெறுவாய்!" என்று கூறி
ஆற்றுப்படுத்துவதை தெளிவாக்குகிறது.
No comments:
Post a Comment