எயிற்றியர் குடிசை
பாடல் வரிகள்:
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசுங்காய் புடை விரிந்தன்ன
வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது
யாற்று அறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை அன்ன வைந்நுதி நெடுந்தகர்
ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை.......(83-88)
பாடல் வரிகள்:
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசுங்காய் புடை விரிந்தன்ன
வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது
யாற்று அறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை அன்ன வைந்நுதி நெடுந்தகர்
ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை.......(83-88)
விளக்கம்:
இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
[...நீண்ட அடிப்பகுதியுடைய இலவம் மரத்தின் அசையும் கொம்பு காய்த்த
பஞ்சையுடைய அழகிய பசுங்காய் முதுகுப் புறத்தில் விரிந்து தோன்றியது
போல்,முதுகுப் புறத்தில் வரிகள் கொண்ட அணிலோடு எலிகள் திரியாது, ஆற்றின்
மணலையொத்த மேற்புறம் செழுமையான மடலையுடைய,வேலின் முனையையொத்த கூர்மையான
முனையுடைய, நெடிய மேட்டு நிலத்தில் ஈச்ச இலைகளால் வேயப்பட்ட முள்ளம்
பன்றியின் முதுகையொத்த (எயினர்களின்) குடிசை...]
இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
எயினர்களின் குடிசையானது நெடிய மேட்டு நிலப்பகுதியில் ஈச்ச இலைகளால்
வேயப்பட்டு முள்ளம்பன்றியின் முதுகைப் போன்ற தோற்றம் உடையது.அந்தக்
குடிசைப் பகுதியில் அணில் மற்றும் எலிகள் திரியாது என்று
குறிப்பிடப்படுவதால் அவைகளை எயினர்கள் வேட்டையாடினர் என்று குறிப்பால்
உணர்த்தப்படுகிறது.
No comments:
Post a Comment